பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் என்கின்ற பெயரிலே நேரத்தை வீணடிக்கிறார்கள்

-மட்டக்களப்பு நிருபர்-

பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் என்கின்ற பெயரிலே நேரத்தை வீண்விரயம் செய்து கொண்டிருக்கின்றார்கள் நேற்று காலை கிரான் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்திலே முக்கிய திணைக்களங்களை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய பலர் கலந்து கொள்ளவில்லை என மட்டக்களப்பு மாவட்டத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.

அபிவிருத்திக் கூட்டங்கள் நடைபெறுவது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இவ்வூடகச் சந்திப்பு மட்டு. ஊடக அமையத்தில் நேற்று புதன்கிழமை  இடம்பெற்றது.

அவர் அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

அதற்கான காரணம் அபிவிருத்தி என்ற பெயரிலே இந்த மாவட்டத்திலேயே கடந்த மூன்று வருடங்களாக எந்த ஒரு வேலை திட்டமும் முன்னெடுக்கப்படவில்லை. அனைத்து கூட்டங்களிலும் அதிகாரிகளை அச்சுறுத்துவதும், அதிகாரிகளில் தங்களுடைய நிகழ்ச்சி நிரல்களுக்குப் பின்னால் வராதவர்களுக்காக மோசமான வார்த்தைகளை பயன்படுத்துவதும் தான் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஒரு சில வருடங்களாக நடந்து கொண்டிருக்கின்றது.

குறிப்பாக சொல்லப் போனால் 3 வருடங்களாக ஒரே விடயத்தை மீண்டும் மீண்டும் நாங்கள் பேசிக் கொண்டிருக்கின்றோம். இதற்கான தீர்வைப் பெற சொல்லலாம் நீங்கள் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தானே நீங்கள் இதற்கான தீர்வினை முன்வைக்கலாம் தானே என்கின்றனர். நாங்கள் முன்வைக்கும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு எங்களுக்கு அந்த அதிகாரம் வழங்கப்படவில்லை.

அதாவது கல்வி சார்ந்த விடயங்களை எடுத்தால் ஆசிரியர் பற்றாக்குறை என்று கூறினால் நாங்கள் அதனை நீண்ட காலமாக சொல்லிக் கொண்டிருக்கின்ற விடயங்கள் சில வலயங்களில் அதிகளவான ஆசிரியர்கள் இருக்கின்றார்கள். சில வலயங்களில் இல்லை.

அதே போன்று கல்வியியல் கல்லூரிகளில் புதிய நியமனங்கள் வழங்குகின்ற போது எங்களுடைய மாவட்டத்தைச் சேர்ந்த பலரே இருக்கின்ற நிலையில் வட, வடமத்திய, மத்திய மாகாணம் போன்ற மாகாணங்களில் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டிருக்கின்றது. தொடர்பாக நாங்கள் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கூட்டத்திலே மிக ஆணித்தரமாக கூறியிருந்தோம். இவர்களை மீண்டும் மாற்ற வேண்டும்.

மாவட்டத்திலே அரசாங்கத்தினுடைய கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்காகவும் பிரதேச ரீதியாக நடைமுறைப்படுத்தவிருக்கும் விடயங்களை பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவரும், மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவரும் இவ்வாறான விடயங்களைப் பற்றிப் எந்த அக்கறையும் எடுக்காமல் தொடர்ச்சியாக இழுத்தடிப்புச் செய்யப்படுகிறது.

வழங்க வேண்டியவர்கள் மௌனமாக இருந்து கொண்டு தங்களுடைய வர்த்தகங்களை பார்த்துக் கொண்டு, அரசாங்கத்துடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவிகளை அதனுடன் வரும் சலுகைகளை மாத்திரம் பெற்றுக் கொண்டு தீர்வுகளைக் காண்பதற்கு நாங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புகள் தான் முன்னின் செயற்பட வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

வன இலாகா சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இந்த மாவட்டத்தில் அதிகளவாக காணப்படுகின்றது. ஆனால் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டங்களில் இத் திணைக்களத்தினர் வருவதில்லை. இந்த நிலையில் பிரதேச மற்றும மாவட்டத்திற்கு அபிவிருத்தி குழுத் தலைவராக இருப்பவருக்கு மூன்று வருடங்களாக இவர்களுக்கான விசாரணையை கூறவில்லையா?

இதற்கான காரணம் இந்த கூட்டங்களின் ஊடாக இவர்களுக்கு உண்மையிலேயே மக்கள் சார்ந்த பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டிய எந்த எண்ணமும் இல்லை என்பது உறுதியாக தெரிகின்றது. நாங்கள் இந்தக் கூட்டங்களுக்குப் போகாமல் விட்டால் இந்த மாவட்டத்தினுடைய வளங்கள் அனைத்தையும் சூறையாடி தற்போது இந்த மாவட்டம் பாலைவனமாக மாறக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கும்.

இன்று காலை இடம் பெற்ற கூட்டத்தில் திகில்வட்டையில் இருக்கின்ற படகுப் பாதையினை பற்றிப் பேசும் போது இதற்காக புதிய பாதையினை கொண்டு வர வேண்டும் என அமைச்சரிடம் பேசியபோது ஒரு குறுகிய கால அரசியல் லாபத்திற்காக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அந்த காலகட்டத்தில் பழைய பாதைய ஒன்றினை அங்கு போட்டதன் ஊடாக புதிதாக ஒரு பாதை வாங்குவதற்கான ஒதுக்கீடு கூட வழங்கப்படவில்லை.

இவ்வாறான விடயங்களில் புதிய சிந்தனைகள் செயல்படாமல் இருப்பது இந்த அதிகாரிகள் கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் இருப்பதற்கான காரணங்களாக இருக்கலாம்.

குறிப்பாக கூறப் போனால் இந்த வனவிலாகவுடன் தொடர்புடைய காணிகள் பிரச்சனைகளுக்கு நாங்கள் ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தைகள் தொடர்ச்சியாக தீர்வு இல்லையெனில் ஜூலை ஒன்பதுக்கு பிற்பாடு நாங்கள் பங்கு பெறுவதில் அர்த்தமில்லை எனக் கூறினோம். ஏனென்றால் தொடர்ச்சியாக 85 ஆம் ஆண்டு வரைபடத்துக்கு சென்றால் எங்களுடைய வடகிழக்கில் இருக்கும் 90விதமான வன இலாகாவுடன் தொடர்புடைய காணிப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

ஆனால் இந்த விடயத்தைக் கூட ஒரு முன்னேற்றகரமாக புதிய சிந்தனையுடன் இப்பொழுது இருக்கும் இந்த காணிகளை அடையாளப்படுத்தி 85 ஆம் ஆண்டு வரைபடம் வந்ததன் பிற்பாடு இந்தக் காணிகளை விடுவித்ததுடன் அதற்கான ஒப்பந்தங்களை செய்து மக்களுடைய எதிர்காலத்தை மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் மீண்டும் மக்கள் பாதிக்கப்படாத வகையில் ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும்.

இன்று நாங்கள் பல தீர்மானங்களை முன் வைத்திருக்கின்றோம். உதாரணமாக எங்களுடைய குடும்பிமலை பிரதேசத்தை பார்த்தால் இராணுவத்தினால் கட்டப்பட்ட ஒரு விடுதி பாவனையில்லாமல் இருக்கின்றது.

இந்த விடுதியை எடுத்து சுற்றுலாப் பயணிகள் வரக்கூடிய ஆலோசனைகளை வழங்கி இருக்கின்றோம். ஆனால் இராணுவத்துக்குரிய எவருமே அந்த கூட்டத்திற்கு வரவில்லை. குடும்பி மலையில் இருக்கும் நெல் கல் மலை என்கின்ற பிரதேசத்தில் தொல்பொருளால் வந்து புதிய கட்டடத்தை கட்டுகின்றார்கள். இதனை நிறுத்த கூறி நாங்கள் தொல்பொருள் திணைக்களத்தின் ஊடாக பல விடயங்களை பேசுவதாக இருந்தால் தொல்பொருள் அதிகாரி அந்த கூட்டத்திற்கு வருவதில்ல.

அடுத்தது எல் ஆர் சி எத்தனை காணி இருக்கின்றது என்கின்ற இவ்வாறான விடயங்களில் இவர்கள் அக்கறை காட்டினார்கள். தவிர மக்களுக்கான சில விடயங்களை தீர்மானத்தை எடுப்பதற்கு எந்த ஒரு தீர்மானமும் 3 வருடத்தில் செயற்படவில்ல.

நாங்கள் இந்தக் கூட்டங்களுக்கு செல்வது அபிவிருத்தியை செய்வோம் என வந்தவர்களிடம் இருந்து எங்களுடைய காணிகளைப் பாதுகாப்பதற்காகத்தான். வளங்களை பாதுகாப்பதற்காக தான் நாங்கள் போகின்றோம்.

அண்மையில் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கூட்டத்திலே தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் அந்த இடத்திலேயே தொடர்ச்சியாக அவர்கள் கூட்டங்களுக்கு வந்தால் எமது பக்கத்தில் தவறுகள் இடம் பெற்று இருக்கிறது என கூறுவார்.

இதன்போது ஜனாதிபதி கூறுவார் அவற்றை நிவர்த்தி செய்யுங்கள் எனக் கூறுவார்.

இதிலே ஜனாதிபதிக்கு நாங்கள் முக்கியமாக சொல்ல வேண்டிய விடயம் இவை அனைத்திற்கும் பொறுப்பானவர் தொல்பொருள் திணைக்கள அமைச்சர் விதுர விக்ரமநாயக்க இந்த கலாசார அமைச்சின் ஊடாக வரும் புத்த சாசன கலாசார அமைச்சினுடைய முன்னாள் பிரதமராக இருந்த ரத்ன ஸ்ரீ விக்ரம் நாயக்கர் மிகவும் ஒரு இனத்துவேஷம் கொண்டவர். அவருடைய மகன் களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த விதுர விக்ரமநாயக்க அமைச்சர்.

நான் நேரடியாக கூறி இருந்தேன் பணிப்பாளரை இவ்வாறு நேரடியாக அச்சுறுத்துவதை விட பணிப்பாளரை தவறான வழியில் நடத்தி அவருக்குப் பின்னால் இருந்து அவருக்கு ஆதரவாக செயற்பட்ட விதுர விக்ரமநாயக்க வை கூட்டத்திற்கு அழைத்து அவரிடம் விளக்கம் கேட்க வேண்டும்.

முல்லைத்தீவு மாவட்டத்திலே குறுந்தூர் மலையில் ராணுவத்தினரிடம் சென்று விதுற விக்ரமநாயக்க என்பவர் தான் அந்த குருந்தூர் மலையில் பிரச்சினைக்கு முக்கிய கதாநாயகனாக இருந்தவர்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள குசலானமலைக்கு அவர் வந்த போது பாரியஎதிர்ப்பினை நாங்கள் வெளிப்படுத்தி அவரை விரட்டி அடித்திருந்தோம். இவ்வாறான காரணத்தினால் தான் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொல்பொருள் தொல்லைகள் குறைவாக இருக்கின்றது.

ஜனாதிபதி அவர்கள் ஏன் விதுர விக்ரமநாயக்கவினை இன்னமும் கண்டிக்கவில்லை. உண்மையை கூறப்போனால் விதுர விக்ரமாநாயக்கவை பதவியில் இருந்து விலக்க வேண்டும்.

அவர்தான் இந்த தொல்பொருள் செயலணிக்குப் பின்னால் இருந்து பணிப்பாளரிடம் இதற்கான ஆலோசனை வழங்குகின்றார்கள். இதற்கான நிதியினை வழங்குபவர் அவர் தான்.

ஜனாதிபதி வெறுமனே ஒரு பணிப்பாளர் நாயகத்தை நீக்குவதற்கோ பணிப்பாளர் நாயகத்தை முடியாவிட்டால் ராஜினாமா கடிதத்தை தாருங்கள் என்பது அவருடைய ஆணித்தரமாகச் சொன்ன ஒரு விடயமாக இருந்தாலும் இதற்கு மூல காரணம் அவருடைய சொந்த அமைச்சரிடம் இருந்து தான் இது ஆரம்பிக்கின்றது.

இதையடுத்து பலர் வந்து ஜனாதிபதி ஆக்கபூர்வமான முடிவு எடுத்தார் என கூறுகின்றார்கள். இன்னமும் அந்த அமைச்சர் இருக்கின்றார். நாளைய ஜனாதிபதிக்கான அந்த பதவி இல்லாமல் போனால் மீண்டும் அமைச்சர் புதிய பணிப்பாளர் நாயகத்தை தெரிவு செய்து புதிய நிகழ்ச்சி நிரலை நடத்துவார்.

இனிவரும் காலத்தில் ஜனாதிபதி தேர்தல் வந்தால் மக்களுடைய ஆதரவை பெறவேண்டும் என்பதற்காக எடுக்கும் சில முயற்சி என்பது மட்டும் தான் என்னுடைய பார்வையிலே உண்மை. ஒரு ஜனாதிபதி இருப்பதாக இருந்தால் இனவாத செயற்பாடு உள்ள விதுர விக்ரமணாயக்க அவர்களை பதவி நீக்கம் செய்திருக்க வேண்டும் என்றார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்