பிரதீப் ரங்கநாதனின் அடுத்தப் படத்தின் நடிகை யார?
இளம் தலைமுறையினர் அனைவருக்கும் பிடித்த நடிகராக வலம் வருபவர் பிரதீப் ரங்கநாதன்.
கோமாளி என்ற திரைப்பத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து லவ் டுடே, ட்ராகன், ட்யூட் என அடுத்தடுத்த வெற்றி படங்களில் நடித்து வலம் வருகிறார்.
இந்த நிலையில், பிரதீப்பின் அடுத்த திரைப்படத்தில் பிரபல நடிகை ஒருவர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகின.
அதன்படி பிரதீப் ரங்கநாதன் இயக்கி, நடிக்கவுள்ள படத்தில் ஸ்ரீலீலா மற்றும் மீனாட்சி சௌத்ரி என 2 நடிகைகள் நடிக்கவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வௌியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
