பிரதி பொலிஸ்மா அதிபர் இடமாற்றம்
குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் டபிள்யூ.திலகரத்ன உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றப்பட்டுள்ளார்.
பொலிஸ் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, நுவரெலிய மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபராக கடமையாற்றிய பிரசாத் ரணசிங்க தற்போது குற்றப்புலனாய்வு பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.