
பிரதான வெள்ள அபாய எச்சரிக்கைகளும் நீக்கம்
இலங்கையில் அமுலிலிருந்த அனைத்துப் பிரதான வெள்ள அபாய எச்சரிக்கைகளும் தற்போது நீக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் இன்று காலை வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது.
குறித்த திணைக்களத்தின் அறிக்கையின்படி, பிரதான ஆறுகளின் நீர் மட்டம் தொடர்ந்து குறைந்து வருகின்றது.
தற்போது எந்த ஆறும் பிரதான வெள்ள மட்டத்தில் இல்லை.
நாகலகம் வீதியில் உள்ள களனி ஆற்றில் மட்டுமே இன்னும் ஒரு எச்சரிக்கை மட்டம் காணப்படுகிறது.
இருப்பினும் அதன் நீர் மட்டம் குறைந்து வருகின்றது.
‘டிட்வா’ புயலினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிற்குப் பிறகு, கடந்த 24 மணி நேரத்தில் அனைத்து கண்காணிக்கப்பட்ட நிலையங்களிலும் மழைவீழ்ச்சி மிகக் குறைந்த அளவிற்கு சரிந்துள்ளது.
அத்துடன் ஹன்வெல்ல, கிளேன்கோர்ஸ் மற்றும் இரத்தினபுரி உட்பட பல முக்கிய இடங்களில் நீர் மட்டம் சாதாரண நிலைக்குத் திரும்பியுள்ளதாகவும் திணைக்களம் மேலும் கூறியுள்ளது.
பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதால், அதிகாரிகள் தொடர்ந்து ஆறுகளைக் கண்காணித்து வருகின்றனர்.
