பிரதான வீதி ஓரத்தில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட காட்டு யானை

-அம்பாறை நிருபர்-

அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பொத்துவில்-விக்டர் ஏத்தம் பிரதேச வீதி ஓரத்தில் காட்டு யானையொன்று இன்று வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்திருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த காட்டு யானை உட்பட சில யானைகள் அப்பகுதிகளில் நடமாடி திரிந்ததை அவதானித்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை யானை உயிர் இழந்தமைக்கான காரணத்தை அறிவதற்காக பிரேத பரிசோதனை நடைபெறுவதுடன் இது  மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டுள்ளது.

மேலும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் பொத்துவில் பொலிஸாரும் இணைந்து இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அண்மைக்காலமாக இப்பகுதிகளுக்கு நூற்றுக்கணக்கான யானைகள் வருகை தந்த வண்ணம் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்