பிரதான பாதையின் வீதி புனரமைப்பு : பெயர் பலகையை திறந்து வைத்தார் அமைச்சர் டக்ளஸ்

-யாழ் நிருபர்-

 

பூநகரி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கிராஞ்சி, வேரவில், வலைப்பாடு, பொன்னாவெளி ஆகிய கிராமங்களுக்கு செல்லும் பிரதான பாதையின் 5.5 கிலோமீற்றர் வீதி கிராம மக்களின் பயணத்திற்கு ஏற்ற முறையில் செப்பனிடும் வேலைத்திட்டம் முடிவடைந்த நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அண்மையில் திரை நீக்கம் செய்யப்பட்டது.

சீமேந்து கம்பனியால் தற்சமயம் 5.5 km நிறைவேற்றப்பட்ட மேலும் இவ்வேலைத்திட்டம் மூன்று வேறுபட்ட பிரிவுகளை உள்ளடக்கியதாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

வேலைத்திட்டத்திற்குரிய தேவையான சகல தொழில்நுட்ப ஆலோசனைகளையும் டோக்கியோ சீமேந்து கம்பனிக்கு வழங்க உள்ளதாக தெரிவித்தார்.

குறித்த அபிவிருத்தியே பணி தொடர்பில் கருத்து தெரிவித்த பொறியியலாளர், பருவகால மழை வீழ்ச்சியின் போது இப்பகுதியில் சுற்றிவரவுள்ள நீர்தேக்கங்களில் இருந்து வரும் நீரினை தகுந்த முறையில் வடிகாலமைத்து நீர் தேங்கும் பகுதிகளுக்கு செலுத்துவதன் மூலம் இப்பாதையை நீண்ட காலம் எதுவித பாதிப்புமின்றி மக்களின் பாவனைக்கு உட்படுத்த முடியும் .

இதற்கு பதில் அளித்த பிரதம பொறியியலாளர் டோக்கியோ சீமேந்து கம்பனியால் மேற்கொள்ளப்பட்ட வடிகாலமைப்பு ஆய்வு மிகவும் தரம் வாய்ந்தது என்றும் அதில் சகல விடயங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளது என்றும் இப்பாதையை நீண்ட காலம் பராமரிக்க முடியும் என்பதையும் தெரிவித்தார்.

குறித்த திட்டத்தின் கீழ் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த பிரதான பாதை போதிய நிதி வளம் இல்லாமையால் இடை நிறுத்தப்பட்ட நிலையில் டோக்கியோ சீமேந்து கம்பனி முன்வந்து இவ்வேலைத்திட்டத்தை செய்வதனால் மீண்டும் இவ்வேலைத்திட்டத்தினை கிளிநொச்சி வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிக்க உள்ளதாக தெரிவித்தார்.

இதன் போது கருத்து தெரிவித்த பூநகரி பிரதேச செயலாளர்,  தற்சமயம் இப்பாதை திருத்தவேலை இடை நிறுத்தப்பட்டதன் காரணத்தை கேட்ட பின்னர் அங்கு காணப்படும் அசாதாரண நிலைமை குறுகிய காலப்போக்கில் சரிவரும் பட்சத்தில் இவ்வேலைத்திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்படலாம் ,என்றார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்