பிரதான அரசியல் கட்சிகளின் தேசிய பட்டியல் விபரம்!
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள பிரதான அரசியல் கட்சிகளின் தேசியப் பட்டியல் வேட்பாளர்களின் விபரங்கள் வெளியாகியுள்ளன.
தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களாக 29 பேர் பெயரிடப்பட்டுள்ளனர்.
இதன்படி, அந்த கட்சியின் தேசிய நிறைவேற்று குழு உறுப்பினர் பிமல் ரத்னாயக்க, இலங்கை மின்சார சேவையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜயலால், யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் ராமலிங்கம் சந்திரசேகரன் உள்ளிட்டோர் தேசியப் பட்டியல் உறுப்பினர்களாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.
இதேவேளை, ஐக்கிய மக்கள் கூட்டணியின் 29 தேசியப் பட்டியல் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, இம்தியாஸ் பாகீர் மார்கர், எஸ்.விஜேயேந்திரன், நிஷாம் காரியப்பர், பழனிவேலு பரமேஸ்வரன், பாலகிருஸ்ணன் சிவநேசன், கணபதி நகுலேசன் உள்ளிட்டோரும் அந்தப் பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, செந்தில் தொண்டமான், சுரேன் ராகவன், தலதா அத்துகோரள, ரவி கருணாநாயக்க, தினேஸ் குணவர்தன உள்ளிட்டோர் தேசியப் பட்டியல் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் தேசியப் பட்டியல் உறுப்பினராகத் தெரிவு செய்யப்படவுள்ள 29 பேரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, உதுராவல தம்மரதன தேரர், சாகர காரியவசம், காமினி லொக்குகே, சி.பி.ரத்னாயக்க, திஸ்ஸ விதாரண, ஜானக திஸ்ஸ குட்டியாராச்சி, ஜயந்த கெட்டகொட உள்ளிட்ட 29 பேர் பெயரிடப்பட்டுள்ளனர்.
அத்துடன் நடிகை அனுஷா தமயந்தி மற்றும் வசந்த ஹந்தபான்கொட ஆகியோரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியலுக்காகப் பெயரிடப்பட்டுள்ளனர்.
