பிரதமாரால் நான்கு குழுக்கள் நியமனம்

அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளின் பற்றாக்குறையை நீக்குவதுடன்,  மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான முன்மொழிவுகளைப் பெறுவதற்கு நான்கு விசேட குழுக்களை இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார்.

வஜிர அபேவர்தன மற்றும் பாலித ரங்கே பண்டார ஆகியோர் பொதுமக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை தட்டுப்பாடு இன்றி வழங்குவதற்காக, சம்பந்தப்பட்ட பிரிவுகளுடன் கலந்தாலோசித்து முன்மொழிவுகளைப் பெறுவதற்காக நியமிக்கப்பட்டனர்.

விவசாயிகள் எதிர்நோக்கும் உரப் பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்காக அகில விராஜ் காரியவசம் நியமிக்கப்பட்டுள்ளார்.

மருந்து வகைகளின் தட்டுப்பாடு தொடர்பில் ஆராய்வதற்காக ருவன் விஜேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

சாகல காரியவசம் எரிபொருள் பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இக் குழுக்கள் குறித்த தரப்பினருடன் கலந்துரையாடி பிரச்சினைகளை தீர்ப்பதற்காக யோசனைகளை முன்வைக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.