பிரதமர் ஹரிணி தலைமையில் விசேட செயலணி

‘டிட்வா’ சூறாவளியினால் ஏற்பட்ட அழிவுகளைத் தொடர்ந்து, நாட்டின் மறுசீரமைப்பு மற்றும் புனரமைப்புப் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் விசேட ஜனாதிபதி செயலணி ஒன்று நிறுவப்பட்டுள்ளது.

இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று புதன்கிழமை  வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஜனாதிபதி செயலணியின் தலைவராக பிரதமர் ஹரிணி அமரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

இதில் அமைச்சரவை அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், மாகாண அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட அரச அதிகாரிகள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.