பிரதமர் இன்று நாட்டு மக்களுக்கு உரை
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று திங்கட்கிழமை நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார்.
நாட்டின் 26ஆவது பிரதமராக பதவியேற்ற பின்னர் நாட்டு மக்களுக்கு அவர் ஆற்றும் முதல் உரை இதுவாகும்.
நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடியின் உண்மை தன்மை, நெருக்கடியை தீர்த்து வலுவான நாட்டை கட்டியெழுப்பு வதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர் பில் பிரதமர் தனது உரையில் வெளிப்படுத்துவார் என தெரிய வருகிறது.
