
பிரதமர், இந்தோனேசிய தூதுவர் சந்திப்பு
பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் இலங்கைக்கான இந்தோனேசிய தூதர் தேவி குஸ்டினா டோபிங் ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவது குறித்துக் கலந்துரையாடப்பட்டுள்ளது.
வர்த்தகம், சுற்றுலா, தொழில்நுட்பம் மற்றும் கல்வி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துதல் மற்றும் மத சுற்றுலாத் துறை உட்படச் சுற்றுலா பரிமாற்றங்களை விரிவுபடுத்துதல் குறித்துச் சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டது.
இலங்கையின் பொதுப் போக்குவரத்து அமைப்பில் மின்சார வாகனங்களைப் பயன்படுத்துவது மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஒத்துழைப்பு குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
