பிரதமரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு
இலங்கையில் பிரதமரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு உண்டு என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
எந்தவொரு கட்சியும் பிரதமர் பதவிக்கு தமது சார்பில் ஒருவரை நியமிக்காதுவிட்டால் பிரதமர் பதவிக்கு ஒருவரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு.
பாராளுமன்ற உறுப்பினர்களின் பொறுப்பற்ற செயற்பாடுகளினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
