சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு பிரியாவிடை நிகழ்வு

-அம்பாறை நிருபர்-

சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் கே.டி.எஸ் ஜெயலத் மொனராகலை மாவட்டம் பிபிலை பிரதேசத்திற்கு நிலைய பொறுப்பதிகாரியாக இடமாற்றம் பெற்று செல்வதை முன்னிட்டு அவருக்கான பிரியாவிடை நிகழ்வு இன்று திங்கட்கிழமை சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஏ.எம்.நௌபர் தலைமையில் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகள் கருத்து தெரிவிக்கையில் “சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் கே.டி.எஸ் ஜெயலத் அவர்களின் சேவைக் காலத்தில் பல்வேறு மாற்றங்கள்  இடம்பெற்றுள்ளது.

அதுமட்டுமின்றி விசேடமாக போதைப்பொருள் ஒழிப்பு, போக்குவரத்து ஒழுங்குபடுத்தல், சமூக பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் தனது முழுமையாக அர்ப்பணித்த ஒருவர் என குறிப்பிட்டனர்.

இதன் போது பிரியாவிடை பெற்றுச் செல்லும் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் கே.டி.எஸ் ஜெயலத் கருத்து தெரிவிக்கையில்” சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் எனது தலைமையின் கீழ் நூறு வீதத்திற்கு, எழுவது வீதமான பல்வேறு பெருங்குற்றப்பிரிவு குற்றச் செயல்களை கட்டுப்படுத்தி உள்ளேன் என்று நினைக்கும் போது பெருமையாக உள்ளது.

இதற்கு சம்மாந்துறை பொதுமக்கள் மற்றும் சக பொலிஸ் உத்தியோகத்தர்கள் உதவியாக இருந்தனர்.

இவ்வாறு உதவியாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என கருத்து தெரிவித்தார்.

இந்நிகழ்விற்கு, சம்மாந்துறை பிரதேச செயலாளர் தேசபந்து எஸ்.எல்.முஹம்மது ஹனீபா, சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஏ.எம். நௌபர், பொலனறுவை மாவட்ட சிரேஷ்ட நீர்ப்பாசன பொறியியலாளர் எம்.எஸ்.எம். நவாஸ், சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம். நௌசாத், தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண இணைப்பாளர் எம்.எம்.ஜி.பி.எம். றசாட்,, சம்மாந்துறை பிராந்திய நீர்பாசன பொறியியலாளர் ஆர்.வேல் கஜன்,சம்மாந்துறை பொலிஸ் நிலைய உபதேச குழுவின் தவிசாளர் ஏ.ஜே. காமில் இம்டாட்,அல் உஸ்வா இஸ்லாமிக் அமைப்பின் தலைவரும் அல் உஸ்வா மகளிர் அரபுக் கல்லூரியின் அதிபருமான மௌலவி ஐ.எல்.எம். முஸ்தபா, சம்மாந்துறை வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் அல்ஹாஜ் ஹக்கீம், திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எச். அல் ஜவாஹிர், சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை உப தலைவர் அல்ஹாஜ் கே.எம்.கே.றம்சீன், மற்றும் பொலிஸ் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டு, அவரின் சேவையை பாராட்டி நினைவுப் பரிசுப் பொருட்கள், பொன்னாடை என்பன வழங்கி வைக்கப்பட்டன.

மேலும் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத் கடந்த 5 வருடம் 9 மாதம் 10 நாட்களாக கடமையாற்றியதுடன் அவரது சேவைக்காலத்தில் பொது மக்கள் மத்தியிலும் பொலிஸ் நிலையத்திற்கும் இடையில் நெருங்கிய உறவு காணப்பட்டது.

இதனால் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பாரிய கொள்ளைச் சம்பவம் மற்றும் திருட்டுச் சம்பவங்கள் என்பன இடம் பெறாமல் காணப்பட்டமை சிறப்பம்சமாகும்.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அம்பாறை மாவட்டத்தின் சிறந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவு செய்யப்பட்டு பொலிஸ் திணைக்களத்தினால் விருதையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.