பின் தங்கிய பாடசாலையில் இரண்டு மாடிக் கட்டிடம் திறப்பு

-மூதூர் நிருபர்-

திருகோணமலை -கிண்ணியா வலயக் கல்வி அலுவலகப் பிரிவிலுள்ள காக்காமுனை அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் 3 கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடிக் கட்டிடத் திறப்புவிழா இன்று விழா வெள்ளிக்கிழமை பாடசாலை அதிபர் எம்.என்.நஸீம் தலைமையில் இடம்பெற்றது.

இதனை கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் டபிளியு.ஈ.எம்.டபிளியு.ஜி திஸாநாயாக்க முதன்மை அதிதியாக கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

இந்த கட்டிடம் முஸ்லிம் எயிட் (UK) நிறுவனத்தின் அனுசரணையில் நிர்மாணிக்கப்பட்டதோடு இக் கட்டிடம் எட்டு வகுப்பறைகளை கொண்டமைந்ததாக அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் ஐக்கிய இராச்சியத்தின் முஸ்லிம் எயிட் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஹாலிட் ஜாவிட், ஐக்கிய அமெரிக்காவின் முஸ்லிம் எயிட் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஷார் அஸீஸ்,முஸ்லிம் எயிட் நிறுவனத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஏ.சி.பைஸர்கான் ,கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் முனவ்வறா நளீம் உள்ளிட்டோர் அதிதிகளாக கலந்து கொண்டு கட்டிடத்தை திறந்து வைத்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்