பிணைமுறி மோசடி தொடர்பான சாட்சியங்களை வழங்க ரணிலுக்கு அழைப்பாணை
2015ஆம் ஆண்டு இடம்பெற்ற மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான சாட்சியங்களை வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை அழைக்கவுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது தெரிவித்தார்.
17 தடவைகள் மக்களால் நிராகரிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போன்ற ஒருவரின் அறிவுரைகளை நான் ஒருபோதும் பெறமாட்டேன் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
மேலும் அரசியலமைப்பின் அடிப்படையான ‘மக்கள் ஆணையை’ புரிந்து கொள்ளாத ரணில் விக்கிரமசிங்க, அரசியலமைப்பை கற்பிக்க முன்வருவது பெரிய நகைச்சுவை என பிரதமர் தெரிவித்துள்ளார்.
