மட்டக்களப்பில் “ஆணிகள் வரைந்த ஓவியம்”பாஸ்கா நாட்டிய நாடகம்

மட்டக்களப்பில் “ஆணிகள் வரைந்த ஓவியம்”பாஸ்கா நாட்டிய நாடகம்

“ஆணிகள் வரைந்த ஓவியம்”பாஸ்கா நாட்டிய நாடகம்

புத்த சாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின், மட்டக்களப்பு-மண்முனை வடக்கு கலாசார மத்திய நிலைய வளவாளர்கள் மற்றும் மாணவர்களினால் ‘ஆணிகள் வரைந்த ஓவியம்’ பாஸ்கா நாட்டிய நாடகம் மட்டக்களப்பு தாண்டவன்வெளி புனித காணிக்கை மாத ஆலயத்தில் நிகழ்த்தப்பட்டது.

நிலைய பொறுப்பதிகாரியான அமலினி ரஞ்சித் குமார் தலைமையில் நேற்று புதன்கிழமை மாலை இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் பிரதம அதிதியாக அதி வந்தனத்துக்குரிய அருட்கலாநிதி பொன்னையா ஜோசப் (மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர்),  சிறப்பு அதிதிகளாக ரி. என். கெட்டியாராய்ச்சி (மேலதிக செயலாளர், புத்த சாசன மதம் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு), திருமதி. சுதர்சினி ஸ்ரீ காந் ( மேலதிக அரசாங்க அதிபர் மாவட்ட செயலகம் மட்டக்களப்பு ), கலாநிதி பிரசாந் ரணசிங்க (பணிப்பாளர், புத்த சாசன மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு), வ . வாசுதேவன் (பிரதேச செயலாளர் பிரதேச செயலகம் மண்முனை வடக்கு), திருமதி பாரதி கென்னடி (பணிப்பாளர், சுவாமி விபுலாந்த அழகியல் கற்கைகள் நிறுவகம் கிழக்கு பல்கலைக்கழகம் மட்டக்களப்பு), கௌரவ அதிதியாக அருட் தந்தை ம. ஸ்ரனிஸ்லாஸ் (புனித காணிக்கை மாத ஆலயம் தாண்டவன் வெளி மட்டக்களப்பு) ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இந்த நிகழ்வில், 70 மாணவர்கள் பங்கேற்று ‘ஆணிகள் வரைந்த ஓவியம்’ என்னும் தலைப்பில் இலங்கையில் முதன் முறையாக பாஸ்கா நாட்டிய நாடகத்தினை மட்டக்களப்பு தாண்டவன்வெளி புனித காணிக்கை மாத ஆலயத்தில் அரங்கேற்றியமை குறிப்பிடத்தக்கது.


மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்