பாவனைக்கு ஒவ்வாத அரிசியை மீள் ஏற்றுமதி செய்யாவிட்டால் பறிமுதல் செய்து அழிக்கப்படும்!

தனியார் இறக்குமதியாளர்களினால் இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 75,000 கிலோகிராம் அரிசி பாவனைக்கு ஒவ்வாதநிலை மற்றும் தெளிவற்ற விபரங்கள் காரணமாகச் சுங்கத்திலிருந்து விடுவிக்காதிருக்கத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

குறித்த அரிசியை மீள் ஏற்றுமதி செய்யுமாறு சுங்கத் திணைக்களம் சம்பந்தப்பட்ட இறக்குமதியாளர்களுக்கு அறிவித்துள்ளது.

கையிருப்பில் உள்ள பாவனைக்கு ஒவ்வாத அரிசியை மீள் ஏற்றுமதி செய்யாவிட்டால் பறிமுதல் செய்து அழிக்கப்படும் என இறக்குமதியாளர்களுக்குச் சுங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.