பாழடைந்த வீட்டிலிருந்து 04 வயது சிறுமியின் சடலம் மீட்பு
சீதுவ, ரத்தொலுகம, சாம மாவத்தை பிரதேசத்தில் பாழடைந்த வீடொன்றில் இருந்து சிறுமி மற்றும் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த வீட்டில் இருந்து 45 வயதான ஆணும் 4 வயதான சிறுமியுமே சடலங்களாக கடந்த 26 ஆம் திகதி மீட்கப்பட்டுள்ளனர்.
தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட நபர், உயிரிழந்த சிறுமியின் தந்தையின் சகோதரன் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சிறுமி இறந்த விதம் தொடர்பில் இதுவரை தகவல் ஏதும் வௌியாகவில்லை.
இது தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்