
ஒரு பாழடைந்த அறைக்குள் அல்லது பாழடைந்த வீட்டுக்குள் போனதும் உடலில் ஒரு நடுக்கம் ஏற்பட்டு அந்த இடத்தில் பேய் இருக்கிறது என்ற பயம் தோன்றும்.
இப்படி ஒரு அனுபவம் நம்மில் சிலருக்கு இருக்கும். அப்படியே இல்லாவிட்டலும் பேய் திரைப்படங்களில் இப்படி ஒரு காட்சி நிச்சயமாக இருக்கும், நாம் பார்த்திருப்போம்
கீழே காணப்படும் புகைப்படத்தில் இருப்பது Mold fungus என்ற ஒரு வகை பூஞ்சை.
இந்த பூஞ்சை மனித உடலில் அரிப்பை ஏற்படுத்துவதோடு, நாம் அதன் மணத்தை சுவாசிக்கும்போது உள்ளே சென்றால் உடலில் ஒரு வித நடுக்கத்தை ஏற்படுத்தும் என இப்பூஞ்சைக்கு ஒரு அறிவியல் பூர்வமான விளக்கம் உண்டு.
இந்த பூஞ்சைகள் பாழடைந்த சுவர்களில் பெரும்பாலும் காணப்படுமாம். இதன் காரணமாக தான் பழைய பாழடைந்த வீடுகளுக்குள் செல்லும் போது நமக்கு உடலில் பயத்திற்கான அறிகுறிகள் ஏற்பட்டு அது மனதில் தொற்றிக் கொண்டு பயம் ஏற்படுகின்றது.

