
பால் தேநீர் கொட்டிய சம்பவம் – 50 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு
உலகளவில் பிரபலமான வர்த்தக நாமமாக ‘ஸ்டார்பக்ஸ்’ நிறுவனம் திகழ்கிறது.
கலிபோர்னியாவில் உள்ள அதன் வர்த்தக நிலையமொன்றில் அண்மையில் நபர் ஒருவர் பால் தேநீரைக் கொள்வனவு செய்துள்ளார்.
இதன் போது அந்த நபரின் மீது பால் தேநீர் தவறுதலாக சிந்தியுள்ளது.
இதன் காரணமாக அந்த நபருக்குத் தீக்காயம் ஏற்பட்டது.
அதற்கு இழப்பீடு கோரி ஸ்டார்பக்ஸ் நிறுவனம் மீது அவர் வழக்கு தொடர்ந்தார்.
லொஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றம் அந்த வழக்கை விசாரித்து, 50 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு வழங்கும்படி, ஸ்டார்பக்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
