பால்மா விலை குறைப்பு?

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் பால்மாவின் விலை குறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் பால்மாவின் விலை 100 ரூபா முதல் 150 ரூபாய்க்கு இடைப்பட்ட விலையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதேவேளை கடந்த சிலகாலமாக பொருளாதார நெருக்கடி காரணமாக பொருட்களின் விலை அதிகரித்திருந்தமை குறிப்பிடதக்கது.