பால்மா உள்ளிட்ட 3 உணவு பொருட்களின் விலை குறைப்பு

லங்கா சதொச நிறுவனம் இன்று வியாழக்கிழமை முதல் அமுலாகும் வகையில் மூன்று உணவுப் பொருட்களின் விலையை குறைத்துள்ளது.

இதன்படி, ஒரு கிலோகிராம் கடலையின் விலை 9 ரூபாவினால் குறைக்கப்பட்டு 540 ரூபாவிற்கும், பாசிப்பயறு ஒரு கிலோகிராமின் விலை 77 ரூபாவினால் குறைக்கப்பட்டு 998 ரூபாவிற்கும், 400 கிலோகிராம் பால்மாவின் விலை 22 ரூபாவால் குறைக்கப்பட்டு 948 ரூபாவாவிற்கும் விற்பனை செய்யப்படும் என லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.