பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்ட பாடசாலை மாணவி: சந்தேகநபரை தேடி பொலிஸார் தீவிர விசாரணை
பதுளையில் பாடசாலை மாணவியை தொடர்ச்சியாக பலமுறை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 21 வயதுடைய இளைஞனை கைது செய்வதற்கான விசாரணைகளை பிபில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
14 வயதுடைய பாடசாலை மாணவியே இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சிறுமி, கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 22ஆம் திகதி, தனது தோழியின் வீட்டிற்கு சென்றதாகவும், இதன் போது மாணவியின் காதலனான அவரது பாடசாலை தோழியின் சகோதரனால் வன்புணர்வுக்கு உற்படுத்தப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
மேலும்,அதன் பிறகு பல சந்தர்ப்பங்களில் மாணவியின் காதலனால் வன்புணர்வுக்கு உற்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த சந்தேக நபர் தற்போது கொழும்பு பகுதிக்கு தொழிலுக்கு சென்றுள்ளதாகவும், அவரை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்