
பாலியல் துஷ்பிரயோக வழக்கு : குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார் டிரம்ப்
பாலியல் துஷ்பிரயோக வழக்கில் சிக்கிய அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.
அத்துடன், 5 மில்லியன் டொலர் இழப்பீடாக வழங்கவும் டிரம்புக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1990 ஆம் ஆண்டு நடந்த இச்சம்பவத்தில் ஈ ஜீன் கரோல் என்பவர் முன்னெடுத்த வழக்கில் தற்போது தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
நியுயோர்க் நகரத்தில் உள்ள ஃபெடரல் நீதிமன்றத்தில் நடுவர் மன்ற விவாதத்தின் முதல் நாளில் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.
கரோலை ஒருபோதும் தான் பார்த்ததில்லை எனவும் அவரை தான் பாலியல் துஷ்பிரயோகம் செய்யவில்லை என்றும் இந்த தீர்ப்பானது தனக்கு அவமானம் என்றும் தனது சமூக வலைத்தள பக்கங்களில் டிரம்ப் பதிவிட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
