பாலம் கட்டுமான பள்ளத்தில் மோட்டார் சைக்கிளுடன் விழுந்த வாலிபர் உயிரிழப்பு

இந்தியாவில் மயிலாடுதுறை அருகே, சாலையின்குறுக்கே பாலம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில், மோட்டார் சைக்கிளுடன் தவறி விழுந்த வாலிபர், கட்டுமானக் கம்பிகளில் சிக்கி உயிரிழந்தார்.

வழுவூரைச் சேர்ந்த மணிகண்டன்என்ற வாலிபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மயிலாடுதுறை – திருவாரூர் நெடுஞ்சாலையில், எலந்தக்குடி பகுதியில், சாலையின்குறுக்கே சிறு பாலங்கள் கட்டும் பணி நடைபெறும் நிலையில், நேற்றைய முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவில், அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த, குறித்த வாலிபர், பாலத்துக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்ததில், கட்டுமானக் கம்பிகள் கழுத்தில் குத்திஇ சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

மேலும் அங்கு திரண்ட வாலிபரின்உறவினர்கள், நெடுஞ்சாலைத்துறையும், ஒப்பந்ததாரரும், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாததால்தான் இவ்விபத்து நிகழ்ந்ததாகக் குற்றஞ்சாட்டி, சாலை மறியலில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக பொலிஸார் உறுதியளித்த நிலையில், போராட்டம் கைவிடப்பட்டு, உடல் மீட்கப்பட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்