
பார ஊர்தி விபத்து: ஒருவர் மரணம்
கிளிநொச்சி பொன்னகர் பகுதியில் நேற்று செவ்வாய் கிழமை இரவு இடம் பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.
விபத்தில் பொன்னகர் பகுதியை சேர்ந்த சந்தானம் புஸ்பராசா (வயது – 34) என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மோட்டர்சைக்கிளும் பார ஊர்தியும் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
