
பார ஊர்தியுடன் மோதிய மோட்டார் சைக்கிள்: ஒருவர் படுகாயம் (புகைப்படம்)
-அம்பாறை நிருபர்-
அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்ஹிலால் பாடசாலை முன்பாக இன்று புதன் கிழமை காலை இடம் பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
சம்மாந்துறை பகுதியை சேர்ந்த குடும்பஸ்தரே விபத்தில் காயமடைந்துள்ளார்.
பார ஊர்தி மற்றும் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த நபர் படுகாயம் அடைந்து கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
குறித்த சம்பவம் தொடர்பில் சாய்ந்தமருது போக்குவரத்து பொறுப்பதிகாரி தலைமையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
