
பாரிஸில் 500 வீதிகளில் பயணிக்க தடை
பாரிஸ் நகரில் 500 வீதிகளில் உந்துருளியில் பயணிப்பதற்கு தடை விதிப்பது குறித்து இன்று திங்கட்கிழமை பொது வாக்கெடுப்பு நடைபெறவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பாரிஸ் நகரில் காற்று மாசடைவதைத் தடுப்பதற்காக உந்துருளிகளுக்கு கட்டுப்பாடு விதிக்க பிரான்ஸ் அரசு தீர்மானித்துள்ளது.
இதற்கு முன்னதாக 200 வீதிகளில் மகிழுந்தில் பயணிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
காற்று மாசடைவதை தடுப்பதற்கும் , பொதுப் போக்குவரத்தை ஊக்குவிப்பதற்கும் பிரான்ஸ் மேற்கொண்டுள்ள ஒரு முயற்சியாக இது கருதப்படுகிறது.
