
பாரிய விபத்து: குழந்தை உட்பட நால்வர் படுகாயம்
யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் இன்று ஞாயிற்று கிழமை நண்பகல் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி உட்பட ஐவர் பயணித்த நிலையில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
மூன்று பெண்கள் ஒரு குழந்தை உட்பட நான்கு பேரே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.
ஊர்காவற்றுறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்து கடலுக்குள் பாய்ந்து குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

