பாரிய சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை
-கிளிநொச்சி நிருபர்-
கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சுடலை குளம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளது.
சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தி நடைபெறுவதாக இராமநாதபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இன்று செவ்வாய்க்கிழமை இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது 18,750 லீற்றர் கோடாவும், 80 லீற்றர் கசிப்பும், கசிப்பு உற்ப்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது
கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் பொலிஸாரை கண்டவுடன் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்
தப்பிச்சென்ற சந்தேகநபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் இராமநாதபுரம் பொலிஸார் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதாகவும், இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்