பாரா ஒலிம்பிக் போட்டியில் இலங்கை வீரர்

இந்த ஆண்டுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியின் ஆண்களுக்கான சக்கர நாற்காலி டென்னிஸ் போட்டியின் இரண்டாவது போட்டியில் இலங்கை வீரர் சுரேஷ் தர்மசேனாவுடன் பிரித்தானியாவின் கார்டன் ரீட் போட்டியிட உள்ளார்.

இப்போட்டி உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

குறித்த நிகழ்வில், ஆஸ்திரியாவின் ஜோசப் ரீக்லருக்கு எதிரான முதல் போட்டியில் கலந்து கொண்ட சுரேஷ் இரண்டு போட்டிகளிலும் பூஜ்ஜியமாக தோல்வியடைய நேர்ந்தது.

இதேவேளை, இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திக கமகே, உள்ளூர் நேரப்படி 11.07க்கு T44 பிரிவில் ஆடவருக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியின் இறுதிப் போட்டியில் பங்கேற்க உள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்