பாராளுமன்ற  உறுப்பினர் கொலை ; முச்சக்கர வண்டி சாரதி கைது

பாராளுமன்ற  உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையதாக   மேலும் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நிட்டம்புவ பகுதியைச் சேர்ந்த 37 வயதான முச்சக்கர வண்டி சாரதி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரையில் 2,027 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 898 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.