பாராளுமன்றம் இன்று கூடுகிறது
பாராளுமன்றம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு கூடுகிறது. நாட்டில் ஏற்பட்ட வன்முறை மற்றும் அரசியல் மாற்றத்தின் பின்னர் முதன்முறையாக கூடும் நிலையில் ஆசன ஒதுக்கீட்டிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக படைக்கள சேவிதர் அலுவலகம் தெரிவித்தது.
இதற்கமைய ஆளும் தரப்பில் ஜனாதிபதியின் ஆசனத்திற்கு அருகில் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளதோடு முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு முன்வரிசையில் வேறொரு ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிய வருகிறது. இது தவிர புதி அமைச்சர்களுக்கும் முன்வரிசையில் ஆசன ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதோடு அடுத்த வரிசைகளில் முன்னாள் அமைச்சர்களுக்கு ஆசனம் ஒதுக்கப்படுவதாக அறிய வருகிறது.
இதே வேளை சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்த பொதுஜனபெரமுன பின்வரிசை எம்பிகள் 10 பேரும் இன்று ஆளும் தரப்பில் அமர உள்ளதாகவும் அறிய வருகிறது.
