பாராளுமன்றத் தேர்தலின் போது கனிஸ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுடனான பயிற்சி செயலமர்வு

-மட்டக்களப்பு நிருபர்-

பாராளுமன்றத் தேர்தலின் போது கனிஸ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுடனான பயிற்சிச் செயலமர்வு மட்டக்களப்பில் இடம் பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டத் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகருமான திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் இடம் பெற்ற பாராளுமன்ற தேர்தலின் போது கனிஸ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுடனான பயிற்சி செயலமர்வானது மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் சட்டத்தரணி எம்.பி.எம்.சுபியானின் ஒழுங்குபடுத்தலில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று சனிக்கிழமை இடம் பெற்றது.

கனிஸ்ட தலைமை தாங்கும் அலுவலர்கள் தேர்தல் கடமைகளில் ஈடுபடும் போது மேற்கொள்ள வேண்டிய முன்னாயத்த விடயங்கள் தொடர்பாகவும், தேர்தல்கள் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சட்ட திட்டங்கள் தொடர்பாகவும் இதன் போது விரிவாக தெளிவூட்டப்பட்டது.

மேலும் சிரேஸ்ட தலைமை தாங்கும் அலுவலருடன் இணைந்து வினைத்திறனான சேவையை வழங்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்