பாராளுமன்றத்தில் வைத்து அர்ச்சுனா தாக்கப்பட்டாரா?
பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவை நான் தாக்கவில்லை தகாத வார்த்தைகளை பிரயோகித்து பேசினார் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ பெரேரா சபையில் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, தான் தாக்கப்பட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ பெரேரா மீது குற்றம் சாட்டினார்.
பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தெரிவிக்கையில்
“எனக்கு உரையாற்ற ஒதுக்கப்பட்ட நேரத்தை அறிந்து கொள்வதற்காக எதிர்க்கட்சி தலைவர் காரியாலத்துக்கு சென்றிருந்தேன். அப்போது அங்கிருந்து சுஜித் என்பவரால் நான் தாக்கப்பட்டேன் பாராளுமன்றத்தினுள் இவ்வாறு தாக்கப்பட்டேன் என்றால் நான் வீதியில் இறங்கி செல்வது எவ்வாறு” என்றார்
அதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ பெரேரா இவ்வாறு தெரிவித்துள்ளார்.