பாரம்பரிய நாட்டுக்கோழிகள் வளர்ப்பில் ஊட்டச்சத்து மேம்பாடும் பொருளாதார மேம்பாடும்

-யாழ் நிருபர்-

பாரம்பரிய நாட்டுக்கோழிகளை வளர்ப்பதன் மூலமாக செலவு குறைந்த ஆனால் அதே நேரத்தில் ஊட்டச்சத்து அதிகமான முட்டை மற்றும் இறைச்சி வகைகளை பயன்படுத்துகின்ற வாய்ப்பை மக்கள் மத்தியில் காவேரிக் கலா மன்றம் கடந்த பல தசாப்த காலமாக அறிமுகப்படுத்தி வளப்படுத்தி வருகின்றது.

அந்த வகையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் மாற்று மக்கள் சபை சங்கங்கள் இணைந்து தங்களுடைய அங்கத்தவருக்கான நாட்டுக்கோழி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் ஊடாக சிறிய அளவிலே வீடுகள் தோறும் நாட்டுக்கோழிகளை நமது பண்பாட்டின் அடிப்படையில் தொடர்ச்சியாக வளர்த்து வருவதன் மூலம் சிறந்த ஆரோக்கியமான ஊட்டச்சத்தை பெறுவதற்கும் அதே நேரத்தில் சிறிய அளவிலான குடும்ப வருமானத்தை மேம்படுத்துவதற்குமான வாய்ப்பை ஏற்படுத்துகின்றது.

இதன் மூலமாக பல்வேறு கிராமங்களில் இந்த சங்கங்களை சேர்ந்த அங்கத்தவர்கள் சிறந்த முறையிலே நாட்டு கோழிகளை வளர்த்து அதன் மூலமாக பயன்பெறுவது மட்டுமல்ல கிராமங்களில் இருக்கிற மற்றவர்களையும் ஊக்கப்படுத்தி வருகிறார்கள்.

இதன் மூலம் சங்கங்களுக்கிடையிலான சிறந்த நாட்டுக்கோழி வளர்ப்பாளர்கள் அதேபோன்று மாவட்ட ரீதியாக வேறு மாவட்டங்களில் இருக்கக்கூடிய மாற்று மக்கள் சபை அங்கத்தவர்களிடையே ஒப்பிட்டு மாவட்ட ரீதியாக அவர்கள் பெறுகின்ற தரவுகளின் அடிப்படையில் முதலாம் இரண்டாம் மூன்றாம் இடங்களை பெறுகின்ற மாவட்டங்கள் மற்றும் சங்கங்களுக்கு பரிசில் வழங்கும்.

நிகழ்வுகள் இந்த மாதங்களின் நடைபெற்று வருகின்றது.

அந்த வகையில் இந்த வருடத்தில் இந்த சங்கங்களில் இருக்கிறவர்களில் இன்றைய நாளில் இருக்கின்ற நாட்டுக்கோழிகளின் அடிப்படையில் முதலாம் இடத்தை பெற்றிருக்கின்றது என்பது மகிழ்ச்சியான விடயம் ஆகும்.

மேலும் இரண்டாம் இடத்தை மட்டக்களப்பு மாவட்டமும் மூன்றாம் இடத்தை வவுனியா மாவட்டமும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாரம்பரிய நாட்டுக்கோழிகள் வளர்ப்பில் ஊட்டச்சத்து மேம்பாடும் பொருளாதார மேம்பாடும்