பாரதி மகா வித்தியாலயத்தில் பரிசளிப்பு விழா
-கிண்ணியா நிருபர்-
தி/மூ/பாரதி மகா வித்தியாலயத்தின் அதிபர் பு.ஜெயகாந்தன் தலைமையில் நேற்று வியாழக்கிழமை வித்தியாலயத்தில் கடந்த வருடம் புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப்பூள்ளிக்கு மேல் பெற்றமாணவர்கள்,க.பொ.த.சாதாரண தரத்தில் பாடசாலையில் முதன்மைப்பெறுபேற்றைப் பெற்ற மாணவன் மற்றும் இப்பாடசாலையில் உயர்தரம் ஆரம்பித்த முதல் வருடப்பெறுபேற்றிலேயே பல்கழகத்துக்கு தெரிவாகிய மாணவி ஆகியோருக்கான பாராட்டு நிகழ்வுடன் இவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களும் பரிசளிப்பு விழாவில் கௌரவிக்கப்பட்டார்கள் .
இந்நிகழ்வில் மூதூர் வலயக்கல்வி அலுவலகத்தின் நிர்வாகத்துக்குப் பொறுப்பான பிரதிக்கல்விப்பணிப்பாளர் தெ.ஜெயந்தன் அவர்கள் முதன்மை விருந்தினராக கலந்து சிறப்பித்திருந்ததுடன் சமூக சங்கப் பிரதிநிதிகளும் கலந்து சிறப்பித்திருந்தனர்
