பாபா வாங்காவின் கணிப்பு : உலகை ஆட்டி படைக்கும் கைபேசி

சமீபத்திய ஆய்வுகளின்படி, அதிகமான திரை நேரப் பயன்பாடு தூக்கமின்மை, மன அழுத்தம் மற்றும் மனநலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பதை உறுதிப்படுத்துகின்றன.

புலேர் பாபா வாங்கா 1996 ஆம் ஆண்டு மறைந்திருந்தாலும் அவர் கூறிய கணிப்புகள் இன்றும் உலகெங்கிலும் பரபரப்பை ஏற்படுத்துகின்றன.

இயற்கை விபத்துகள் முதல் அரசியல் கலவரங்கள் வரை பல சர்வதேச நிகழ்வுகளைக் குறித்த அவரது முன் கணிப்புகள், நிகழ்காலச் சூழ்நிலைகளுடன் ஒத்துப்போகும் போதெல்லாம் மீண்டும் மீண்டும் பேசப்படுகின்றன.

இந்த ஆண்டில், அவரது கணிப்பு போர், நோய்த்தொற்று அல்லது சூழலியல் பேரழிவுகளைப் பற்றியது அல்ல.

திறன்பேசி மீது அதிகமான சார்பு, எதிர்காலத்தில் மனிதர்கள் உணர்வுகளற்றவர்களாக மாறி, டிஜிட்டல் அடிமைகளாக வாழும் நிலை உருவாகும் என அவர் கணித்திருக்கிறார்.

இது ஆராய்ச்சியாளர்கள், உளவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க