பாதுகாப்பு அமைச்சருக்கு சட்டம் கற்பிக்க வேண்டும்

பாதுகாப்பு அமைச்சருக்கு சட்டம் கற்பிக்க வேண்டும், என பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு கட்டாய அனுமதி குறித்த, பதில் பாதுகாப்பு அமைச்சரின் அறிக்கையை இலங்கை சட்ட நிபுணர்கள் மறுத்துள்ளனர்.

ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு 06 மணித்தியாலங்களுக்கு முன்னர் பொலிஸாரிடம் அனுமதி பெறப்பட வேண்டும், என பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

நேற்று திங்கட்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இலங்கையின் சட்டங்களின்படி இந்த தேவை கட்டாயமானது என தெரிவித்தார்.

சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் (BASL) தலைவர் சாலிய பீரிஸ் ஆகியோர் பதில் பாதுகாப்பு அமைச்சரின் கோரிக்கையை நிராகரித்துள்ளனர்.

‘பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பதில் பாதுகாப்பு அமைச்சர் ஆகிய இருவருக்கும் அடிப்படை உரிமைகள் தொடர்பான சட்டத்தில் சரியான முறையில் கற்பிக்கப்பட வேண்டும்’ என பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.

மேலதிக செய்திகளுக்கு:-  Minna24news

இவற்றையும் பார்வையிடலாம் :- சட்ட நடவடிக்கை எடுப்பது நகைச்சுவையாக உள்ளது,