
பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பான தகவல்களை கேட்டறிந்தார் ஜனாதிபதி
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட நுவரெலியா மற்றும் பதுளை மக்கள் தொடர்பான தகவல்களை ஜனாதிபதி கேட்டறிந்தார்
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டோர் தங்கியுள்ள நுவரெலியா Cinecitta மண்டபத்தில் அமைந்துள்ள பராமரிப்பு நிலையத்திற்கு இன்று திங்கட்கிழமை பிற்பகல் சென்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அந்த மக்கள் தொடர்பான தகவல்களை கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து , ரேந்தபொல பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி, சேதமடைந்த வீதிகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்தி குறித்தும் ஆராய்ந்தார்.
