பாதணிகள் நிறுவன நிர்வாக பணிப்பாளரின் வீட்டின் மீது துப்பாக்கிப் பிரயோகம்!

பொரளை பகுதியில் உள்ள வீடு ஒன்றின் முற்றத்தில் இனந்தெரியாத குழுவினரினால் இன்று வியாழக்கிழமை காலை இரண்டு முறை டி -56 ரக துப்பாக்கியால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிரபல பாதணிகள் நிறுவனமொன்றின் நிர்வாக பணிப்பாளர் ஒருவருக்குச் சொந்தமான வீட்டிலேயே குறித்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதுடன் இதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

துப்பாக்கி சூடு தொடர்பில் பொலிஸாரினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.