பாண் மற்றும் கேக்கின் விலைகளில் மாற்றம்?

பண்டிகை காலத்துக்கு முன் கோதுமை மா மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட வெண்ணெய்யின் விலையை குறைத்தால், பாண் மற்றும் கேக்கின் விலை குறைக்கப்படும் என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

அதன்படி, பாணின் விலை 100 ரூபாயாகவும், ஒரு கிலோ கேக் விலை 800 முதல் 900 ரூபாய் வரை குறைக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஏனைய பேக்கரி பொருட்களின் விலையை குறைக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே எதிர்வரும் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டுக்கு முன்னர் பாண், கேக் மற்றும் ஏனைய பேக்கரி பொருட்களின் விலையை குறைத்து நுகர்வோர் திருப்தியடைய முடியும் என ஜயவர்தன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்