
பாணின் விலை குறைப்பு?
டீசல், எரிவாயு மற்றும் கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டால், ஒரு இறாத்தல் பாணிண் விலையை 50 ரூபாவால் குறைக்க முடியும், என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
