பாட்டியையும் தாத்தாவையும் கொலை செய்த 22 வயது பேரன் கைது

-பதுளை நிருபர்-

பாட்டியையும், தாத்தாவையும் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த 22வயதுடைய பேரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பல்லகெடுவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நவநிவச நாவலகம பகுதியில் 80 வயதுடைய தாத்தாவையும் 70 வயதுடைய பாட்டியையும் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்து விட்டு தலைமறைவான பேரன் எல்ல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கீரியகொல்ல மடுகஸ்தலாவ பகுதியில் உள்ள வனப்பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலையாளி கீரியகொல்ல மடுகஸ்தலாவ வனப்பகுதியில் தலைமறைவாகி இருப்பதாக பல்லகெடுவ பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து, பல்லகெடுவ பொலிஸாரும் பண்டாரவளை பொலிஸாரும் விஷேட அதிரடி படையினரும் இணைந்து குறித்த வனப்பகுதியை சுற்றிவளைத்து தேடுதலை மேற்கொண்ட போது குறித்த சந்தேக நபர் வனப்பகுதியினூடாக வெள்ளவாய பிரதேசத்திற்கு தம்பி செல்ல முற்பட்ட வேளையிலேயே நேற்று வியாழக்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபரை இன்று வெள்ளிக்கிழமை பண்டாரவளை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பல்லகெடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.