பாடவேளையின் போது 12 வயது மாணவியின் மார்பகத்தை தொட்ட அதிபருக்கு கடூழியச் சிறைத் தண்டனை!

விஞ்ஞான பாடத்தின்போது 12 வயது மாணவியின் மார்பகத்தை தொட்ட அதிபருக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒருவருட  கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

விஞ்ஞான பாடம் கற்பிக்கும் போது 12 வயது பாடசாலை மாணவியின் மார்பகத்தை தொட்டு பாலியல் வன்கொடுமை செய்தார் என்ற குற்றச்சாட்டை குறித்த அதிபர் ஒப்புக் கொண்டதால் அநுராதபுரம் நீதிமன்ற நீதிவானும் மேலதிக நீதிவானுமான நாலக சஞ்சீவ ஜயசூரிய இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதற்கு மேலதிகமாக, பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஐம்பதாயிரம் ரூபா நட்டஈடு வழங்குமாறு குற்றஞ்சாட்டப்பட்ட அதிபருக்கு உத்ரவிடப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி  குறித்த அதிபர்  12 வயது மாணவியின் மார்பகத்தை தொட்டு இந்த குற்றச் செயலை அவர் புரிந்துள்ளார்.

குற்றவியல் சட்டத்தின் 345 ஆம் பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட அதிபருக்கு எதிராக அனுராதபுரம் தலைமையகப் பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் வழக்குத் தாக்கல் செய்திருந்தது.