பாடசாலை வேனில் இருந்து தினமும் இறுதியாக இறங்கும் சிறுமிக்கு சாரதி செய்த செயல்!
பத்து வருடங்களுக்கு முன் தனது வாகனத்திற்குள் வைத்து தரம் 4 இல் கல்வி பயிலும் மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததற்காக 68 வயதான பாடசாலை வேன் சாரதிக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் 25 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.எஸ்.சபுவிதா இவ்வாறான குற்றங்களுக்கு தண்டனைச் சட்டத்தின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட அதிகபட்ச தண்டனையை விதித்து தீர்ப்பளித்தார்.
ஒரு பிள்ளையின் தந்தையான வேன் சாரதி அவரால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 500,000 ரூபா இழப்பீடும் 30,000 ரூபா அபராதமும் செலுத்த நீதிபதி உத்தரவிட்டார்.
பணம் செலுத்தத் தவறினால் கூடுதல் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட சிறுமி சுமார் இரண்டு வருடங்களாக குறித்த பாடசாலை வேன் சேவையைப் பயன்படுத்தி வந்துள்ளார். குறித்த வேனில் இருந்து இறுதியாக வீட்டில் இறக்கி விடப்படும் சிறுமி அவர் என்பதால் இந்தச் சூழ்நிலையை பயன்படுத்திஇ சிறுமிக்கு இனிப்புகளை வாங்கி கொடுத்து சிறுமியை மீண்டும் மீண்டும் துஷ்பிரயோகம் செய்ததாக குறித்த சாரதி விசாரணைகளின் போது தெரிவித்ததாக சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்தார்.
சிறுமி இந்த விடயம் குறித்து தனது தோழியிடம் தெரிவித்துள்ளார் தோழி மூலம் இவ்விடயம் சிறுமியின் தாயாருக்கு தெரிவிக்கப்பட்டு சிறுமியின் தாயார் வேன் சாரதி மீது பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளார்.
சிறுமியை பாதுகாப்பாக கொண்டு செல்லும் பொறுப்பு சாரதியிடம் இருந்ததால் அவர் இந்த தவறை மிக இலகுவாக செய்ததாகவும் பெற்றோர் தமது குழந்தைகள் விடயத்தில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கும் போது நீதிபதி தெரிவித்தார்.
