
பாடசாலை விடுமுறை தொடர்பிலான அறிவிப்பு
பாடசாலை செயற்பாட்டின் 3ஆம் தவணையின் முதல் கட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் 22ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) நிறைவடைய உள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை பாடசாலை விடுமுறை நவம்பர் மாதம் 23ஆம் திகதி முதல் 2025 ஜனவரி 1ஆம் திகதி வரை நீடிக்கும் என்று கல்வி அமைச்சு கூறுகிறது.
மேலும், 3ஆம் தவணையின் இரண்டாம் கட்டம் ஜனவரி 2ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
