
பாடசாலை மாணவர்களை ஏற்றி சென்ற பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்து
அம்பாறை உதேனிய ரணவிரு மாவத்தைக்கு அருகில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
விபத்தின் போது பேருந்தில் 30 சிறுவர்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் காயமடைந்த ஐந்து பாடசாலை மாணவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
