பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து கசிப்பு விற்பனை : சந்தேக நபர் கைது

-பதுளை நிருபர்-

லுணுகலை பல்லேகிருவ பாடசாலைக்கு ஒன்றுக்கு அருகில் சட்டவிரோத முறையில் மதுபானம் விற்பனை செய்த ஒருவர் 5000 மில்லி கசிப்புடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

லுணுகலை பல்லேகிருவ, தலுக்கஹவெல பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் பாடசாலைக்கு ஒன்றுக்கு அருகில் சில காலமாக சட்டவிரோத கசிப்பு விற்பனை  செய்வதாக புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய, குறித்த பகுதியை சுற்றிவளைத்து தேடுதலை மேற்கொண்ட போது சந்தேக நபர் கசிப்புடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்

குறித்த நபர் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து கசிப்பு விற்பனையில் ஈடுப்பட்டு இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றன

இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்