பாடசாலை மாணவர்களுக்கு பகுதிநேர தொழில்வாய்ப்பு

16 முதல் 20 வயதுக்கு இடைப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு தனியார் நிறுவனங்களில் பகுதி நேர தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொள்ளக் கூடிய வகையில் சட்டத்தை திருத்தம் செய்ய தொழில் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் தொழில் புரியும் சூழலுக்கு பழக்கப்படாததன் காரணமாக தொழிற்துறையில் பல்வேறுப்பட்ட பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.

இதன்காரணமாக குறித்த வயதுகளை கொண்ட இளைஞர்களுக்கு மாதாந்தம் 20 மணித்தியாலம் பகுதிநேர தொழில் வாய்ப்புகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அந்த காலப்பகுதிக்கான கொடுப்பனவை செலுத்த தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.